கவர்னர் தமிழிசை சென்னை விருகம்பாக்கத்தில் வாக்களித்தார்

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்காளர்கள் ஓட்டு போடலாம்.

காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில் தெலுங்கானா மற்றும் புதுவை கவர்னர் டாக்டர் தமிழிசை சென்னை விருகம்பாக்கம் விநாயகர் தெருவில் உள்ள கிளாரன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தனது கணவர் சவுந்தரராஜனுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.