கவர்னர் ஆர்.என்.ரவியை அண்ணாமலை இன்று சந்திக்கிறார்
கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று பிற்பகல் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க. பைல்ஸ் என்ற பெயரில் தி.மு.க.வினரின் சொத்து பட்டியல்களை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14-ந்தேதி வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து ஊழல் பட்டியல் பாகம்-2 ஜூலை மாதத்திற்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று கவர்னரை சந்திக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க. அமைச்சர்களின் 2ம் கட்ட சொத்து பட்டியலை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.