கபில் தேவ் சாதனையை முறியடிக்க அஸ்வினுக்கு வாய்ப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர்களில் அதிக விக்கெட் எடுத்தவர் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே. அவர் 619 விக்கெட்டுகளை (132 போட்டி) கைப்பற்றி உள்ளார்.

2-வது இடத்தில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 434 விக்கெட்டுகளுடன் (131 போட்டி) உள்ளார். 3-வது இடத்தில் தற்போது இந்திய அணியில் விளையாடி வரும் முதன்மை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் உள்ளார். அவர் இதுவரை 81 போட்டிகளில் 427 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று தொடங்கும் டெஸ்ட் தொடரில் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

இதற்கு அவருக்கு இன்னும் 8 விக்கெட்டுகளே தேவை. இதன் மூலம் அவர் கபில்தேவை முந்த முடியும். அதே வேளையில் தென் ஆப்பிரிக்கா மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அஸ்வினின் சுழற்பந்து எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.