கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா

இந்தியா, இங்கிலாந்து அணியிலான 4வது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடிக் கொண்டிருந்தது.

இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் விக்கெட்டை பும்ரா எடுத்தார். இது அவரது 100-வது விக்கெட் ஆகும்.

மேலும், 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதேபோல், இர்பான் பதான் 28 போட்டியிலும், முகமது ஷமி 29 போட்டியிலும், ஜவகல் ஸ்ரீநாத் 30 போட்டியிலும், இஷாந்த் சர்மா 33 போட்டியிலும் 100 விக்கெட்கள் எடுத்துள்ளனர்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அனைத்து வடிவ போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசுகிறார். தனது பந்து வீச்சில் பல்வேறு மாறுபாடுகளை வெளிப்படுத்துகிறார் என இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் சமீபத்தில் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.