கன மழை எதிரொலி – 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கடலோர மற்றும் தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், நெல்லை, ராமநாதபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், விருதுநகரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக 9 மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.