கனிமொழி பொய் பிரசாரம் செய்கிறார் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அவர் கூறியதாவது:

* கனிமொழி போகும் இடமெல்லாம் பொய் பிரசாரம் செய்து வருகிறார். நாள் புள்ளி விவரத்துடன் பேசுகிறேன்.

* தொலைபேசியில் புகார் செய்தாலே மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

* 1100 என்ற எண்ணில் குறைகூறி தீர்வு காணும் திட்டம் ஸ்டாலின் சொல் நான் அறிவிக்கவில்லை.

* ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* மக்களை பற்றி கவலைப்படாத கட்சி திமுக. மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தபோது திமுக என்ன செய்தது.

* விவசாயிகள் பம்பு செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும்.

* தமிழகத்தில் எந்த திட்டங்களும் நிறைவேற்றபடவில்லை என ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருகிறார்

*காங்கிரஸ் ஆட்சியில் திமுகதான் மத்திய அரசுக்கு அடிமையாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.