கண்கள் கசிந்தன – அமிதாப் பச்சன் குறித்து பார்த்திபன்

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆரத்யா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விரைவில் குணமடைய பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அந்தவகையில், இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய வேண்டி, வெளியிட்டுள்ள பதிவில், “அமிtop! ரசிகனாய் என் அபிமான நட்சத்திர வரிசையில் உயர்நிலையில் நிற்பவர்! Positive-இன்றல்ல,என்றுமே நினைப்பவர் – உணர்வலைகளை பரப்புபவர். மருத்துவமனையிலிருந்து அவர் பேசப் பேச கண்கள் கசிந்தன மூப்பு என்ற ஒரே பலவீனத்தை தவிர மிக strong மனிதர். மகனின் கைகளை பற்றியபடி நலமோடு திரும்ப பிரார்த்தனைகள்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *