கட்டுமான தளத்தில் சிமெண்ட் தூண் விழுந்து 3 பேர் பலி!

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று காலை கட்டுமான தளத்தில் சிமென்ட் தூண் ஒன்று டிப்பர் வாகனத்தின் மீது விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மண்டி மாவட்ட அவசர நடவடிக்கை பிரிவு வழங்கிய தகவலின்படி, டிப்பர் வாகனத்தில் 5 பேர் இருந்தனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலியாரில் உள்ள இடத்தில் சிமென்ட் தூண் டிப்பர் வாகனம் மீது விழுந்தது. காயமடைந்தவர் மேல்சிகிச்சைக்காக மண்டி மண்டல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து தொடர்பாகன விவரங்கள் காத்திருக்கின்றன.