கங்கனா ரணாவத் படத்தை நிராகரித்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

இந்திய சினிமா உலகில் மிகவும் பிரபலமானவர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழில் பல முன்னணி இயக்குனர்கள் படங்களில் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில், இவர் அந்த நடிகை என்பதால் படத்தில் இருந்து வெளியேறி விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவருடைய பதிவில், ‘கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கும் படத்தை நான் நிராகரித்து விட்டேன். எனது நிலைப்பாட்டை தயாரிப்பாளர்களுக்கு விளக்கினேன். அவர்களும் புரிந்து கொண்டார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்’ என்று கூறியிருக்கிறார்.

பிரபல நடிகையான கங்கனா ரணாவத், சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தியில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம், போதை பொருள் புழக்கம் உள்ளது என்றெல்லாம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். மராட்டிய அரசியல்வாதிகளும் மும்பை போலீசாரும் வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக இருப்பதாக சாடினார். இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி வருகிறது.