ஒலிம்பிக் பேட்மிண்டன் – ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தோல்வி

பேட்மிண்டன் இரட்டையர்  குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆண்கள் இரட்டையருக்கான ‘ஏ’ பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்- சிராக் ஷெட்டி ஜோடி இடம் பிடித்துள்ளது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நம்பர் ஒன் ஜோடியான இந்தோனேசியாவின் ஜிடியோன்- சுகமுல்ஜோ ஜோடியை எதிர்கொண்டது.

நம்பர் ஒன் ஜோடிக்கு எதிராக இந்திய ஜோடியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இதனால் 13-21, 12-21 என தோல்வியடைந்தது.