ஒரே மாதத்தில் விஜய் சேதுபதியின் 4 படங்கள் ரிலீஸ்

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடித்துள்ள துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி, அனபெல் சேதுபதி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன.

இதில் துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி, அனபெல் சேதுபதி ஆகிய 4 படங்கள் ஒரே மாதத்தில் ரிலீசாக உள்ளன. அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் 9-ந் தேதி லாபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் செப் 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. மறுதினமே இப்படம் ஓடிடி-யிலும் வெளியாக உள்ளது.

இதுதவிர விஜய் சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அனபெல் சேதுபதி’ திரைப்படம் வருகிற செப் 17-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ள ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தையும் செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.