ஒரே நாளில் இரண்டு விழாக்களை கொண்டாடிய நடிகை யோகி பாபு

தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு. அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார் யோகி பாபு. இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி மஞ்சு பார்கவி என்ற பெண்ணை குலதெய்வ கோயிலில் எளிமையாக திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

இன்று யோகி பாபு தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதே நாளில் தனது மகனின் பெயர் சூட்டு விழாவையும் விமரிசையாக கொண்டாடி இருக்கிறார் யோகி பாபு. தீவிர முருக பக்தரான யோகிபாபு தனது மகனுக்கு ’விசாகன்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்.

இந்த பெயர் சூட்டும் விழாவில், இயக்குனர் விருமாண்டி, இயக்குனர் முத்துக்குமரன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டதோடு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.