ஒரு பாடல் காட்சிக்கு ரூ.23 கோடி செலவு செய்த இயக்குநர் ஷங்கர்

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் திரைப்படங்களை இயக்கி பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்தவர் ஷங்கர். இவர் தற்போது ராம்சரணை வைத்து தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ அதிக பொருட் செலவில் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு ரூ.23 கோடி செலவு செய்துள்ளாராம் ஷங்கர். இது தெலுங்கு திரையுலகினரையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இப்பாடல் பற்றிய எதிர்பார்ப்பு இப்பொழுதே ரசிகர்களிடையே எழுந்துள்ளது.