ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை – பாபர் அசாம் தொடர்ந்து முதலிடம்

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.

முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், 3-வது ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார். அவர் 139 பந்தில் 158 ரன்கள் விளாசினார். இதன்மூலம் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.

8 புள்ளிகள் அதிகம் பெற்று 873 புள்ளிகள் பெற்றுள்ளார். விராட் கோலி 16 புள்ளிகள் குறைவாக பெற்று 2-வது இடத்தில் நீடிக்கிறார். ரோகித் சர்மா 825 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் 801 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ஆரோன் பிஞ்ச் 791 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.