ஒடிடி-யில் வெளியாகும் ‘ஆர்.ஆர்.ஆர்’

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.

இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.

இந்நிலையில் இப்படம் மீண்டும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ஜீ5 தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வருகிற மே 20 அன்று வெளியாகிறது.