ஐ.எஸ்.எல் கால்பந்து – மும்பையை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொண்ட கேரளா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து 8-வது போட்டி தொடர் கோவாவில் நடை பெற்று வருகிறது. நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோதின.

கேரளா அணி தரப்பில், சஹல் சமத் ஒரு கோல் அடித்தார். மற்றொரு வீரர் அல்வரோ 2 கோல்களை பதிவு செய்தார். மும்பை சிட்டி அணி வீரர் டியாகோ தமது அணிக்காக ஒரு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் மும்பையை தோற்கடித்தது. இதன் மூலம் 9-வது வெற்றியை பெற்றுள்ள அந்த அணி அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணி, ஏ.டி.கே. மோகன் பகான் அணியுடன் மோதுகிறது.