ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்?

2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர்.

அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீனு அரோரா தயாரிப்பில் ‘ஓ சாத்தி சால்’ என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இவர் தற்போது தமிழில் படம் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் இதில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதியானால் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் முதல்முறையாக இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.