ஐபிலெ கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக புதிய சாதனை படைத்த தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார். நேற்று டெல்லி அணிக்கு
எதிரான ஆட்டத்தின்போது ரோமன் பாவெல்லை அவுட் ஆக்கியதன் மூலம், ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 150 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதன்மூலம், சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு பிறகு, ஐபிஎல் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 150 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்
தினேஷ் கார்த்திக்.