ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் சிஎஸ்கே தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி ஓய்வு பெற்று விட்டார். எனினும், ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமையை மீண்டும் நிரூபிக்க காத்திருக்கிறார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறும்பொழுது, டோனி ஐ.பி.எல். தொடரில் வெற்றிகளை குவிக்க மிகுந்த ஆவலுடன் இருப்பார் என குறிப்பிட்டுள்ளார். சுமார் 438 நாட்களுக்கு பிறகு டோனி நாளை கிரிக்கெட் களம் காண உள்ளார்.

ஐ.பி.எல். வரவலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் அது சென்னை அணி தான் என்றும் டோனி 4வது இடத்தில் களமிறங்கினால் அதிக ரன்களை குவிப்பது உறுதி என்றும் பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இன்று நடைபெறும் முதல் ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணி சார்பில் டோனி விளையாடி அசத்த உள்ளார்.