Tamilவிளையாட்டு

ஐபிஎல் போட்டியில் அதிவேகமாக 1000 ரன்கள் சேர்ப்பு – சச்சின் சாதனையை சமன் செய்த ருதுராஜ்

ஐபிஎல் தொடரில் புனேவில் நேற்று நடைபெற்ற 46வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

முதலில் ஆடிய சென்னை அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே அதிரடியாக ஆட 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. ருதுராஜ் 99 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

அடுத்து ஆடிய ஐதராபாத் 6 விக்கெட்டுக்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக ஆயிரம் ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கர் சாதனையை ருதுராஜ் சமன்செய்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் 31 இன்னிங்ஸ்களில் 1,076 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கர் முந்தைய சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்தப் பட்டியலில் 34 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை அடித்த ரெய்னா இரண்டாமிடத்திலும், ரிஷப் பண்ட் (35), தேவ்தத் படிக்கல் (35) ஆகிய இருவரும் 3ம் இடத்திலும், ரோகித் சர்மா (37), எம்.எஸ்.டோனி (37) ஆகிய இருவரும் 4ம் இடத்திலும் உள்ளனர்.