ஐபிஎல் புள்ளி பட்டியல் – மீண்டும் முதலிடம் பிடித்த சி.எஸ்.கே

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 30 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், புள்ளி பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை அணி  8 ஆட்டங்களில் 2 தோல்வி 6 வெற்றி என 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் 8 ஆட்டங்களில் 2 தோல்வி, 6 வெற்றி என 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 4-வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4-ம் இடத்தில் உள்ளது.