ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த வார்னர்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 201 ரன்கள் குவித்தது.

வார்னர் – பேர்ஸ்டோவ் ஜோடி 15.1 ஓவரில் 160 ரன்கள் குவித்தது. வார்னர் 40 பந்தில் 52 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 50 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனைப் படைத்தார். இதில் நான்கு சதங்கள் அடங்கும்.

விராட் கோலி 5 சதங்களுடன் 42 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். சுரேஷ் ரெய்னா 1 ஒரு சதத்துடன் 39 முறையும், ரோகித் சர்ம 1 சதத்துடன் 39 முறையும், ஏபி டி வில்லியர்ஸ் 3 சதங்களுடன் 38 முறையும அரைசதம் அடித்துள்ளனர்.