ஐபிஎல் கிரிக்கெட் மீது சூதாட்டம் – உத்தரபிரதேசத்தில் 5 பேர் கைது

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து சிலர் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தகவலை உறுதி செய்த போலீசார், நேற்று பாபமாவ் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி 5 பேரை கைது செய்தனர். அவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் சூதாட்டத்திற்குப் பயன்படுத்திய 6 செல்போன்கள் 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் அவர்களின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.