ஐபிஎல் கிரிக்கெட் – பிளேஆஃப் சுற்றுக்கு பெங்களூர் முன்னேறியது

ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் வெற்றிபெறும் அணி பாயின்ட் டேபிளில் 2-வது இடத்திற்கு முன்னேறும். ரன்ரேட் அடிப்படையில் தோல்வியடையும் அணியின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்ற நிலை இருந்தது.

டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.

பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களம் இறங்கியது. 16.5 ஓவரை தாண்டி தோல்வியடைந்தாலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும். அதே நேரத்தில் 17.4 ஓவர் வரை தாக்குப்பிடித்து தோல்வியடைந்தாலும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஆர்சிபி-க்கு இருந்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆர்சிபி டெல்லியை 17.4 ஓவருக்குள் வெற்றி பெற விடாததால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.

வெற்றி பெற்ற டெல்ல கேப்பிட்டல்ஸ் பாயின்ட் டேபிளில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.