ஐசிசி டெஸ்ட் தரவரிசை – மீண்டும் முதலிடத்தை பிடித்தது இந்திய அணி

டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. இதன் மூலம் அந்த அணி ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை  நியூசிலாந்து வென்றதன் மூலம், இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்தில் நீடித்து வந்தது.

இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 124 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்தது. 121 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 2-வது இடத்திலும்,  108 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் உள்ளன.

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து அணி 4-வது இடத்திலும், பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திலும் நீடிக்கின்றன.