எதிர்வரும் போட்டிகளில் தவறுகளை சரிசெய்வோம் – ரிஷப் பண்ட்

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. போட்டி நிறைவுக்கு பின்னர் பேட்டியளித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தெரிவித்திருப்பதாவது:

கடந்த போட்டியில் நாங்கள் சேஸ் செய்தோம், இந்த போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்தோம், எனவே அவர்கள் பேட்டிங் செய்யும் போது, ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் சிறப்பாக இருந்தது.  அவர்கள் மிடில் ஓவர்களில் நன்றாக பேட்டிங் செய்தார்கள் அதனால்தான் அவர்கள் இலக்கைத் துரத்தினார்கள். மிடில் ஓவர்களில் எங்களுக்கு போதுமான விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. அவர்கள் (தென்ஆப்பிரிக்க ஸ்பின்னர்கள்) சீரான முறையில் பந்து வீசினார்கள் என்று நான் நினைக்கிறேன், மேலும் அவர்கள் ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்ப விளையாடுவதற்குப் பழகிவிட்டனர்.

நாங்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறோம்.  நீண்ட காலத்திற்கு 50 ஓவர் ஆட்டத்தில் விளையாடாததது தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் ஒரு அணியாக, நாங்கள் எப்போதும் எங்கள் ஆட்டத்தை மேம்படுத்த விரும்புகிறோம், வரும் போட்டிகளில் அவற்றை சரிசெய்ய முடியும் என்று நம்புகிறோம் இவ்வாறு தமது பேட்டியின்போது ரிஷப் பண்ட் குறிப்பிட்டார்.