உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முகநூல் பக்கம் உள்ளிட்ட சமூக வலைதளப்பக்கங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக்டிவாக உள்ளார். தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மற்றும் அரசு அறிவிப்புகளை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வரும் அவர், அவ்வபோது மக்களுக்கான சில பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என உறுதி அளிக்கிறேன், என்று தனது முகநூல் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்ற பழமொழியை சுட்டிக்காட்டி உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என உறுதியளிக்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.