உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி – அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து

உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, தனது முதலாவது லீக் ஆட்டத்தில் டென்மார்க்கின் லின் கிறிஸ்டோபர்சென்னுடன் மோதினார். 38 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-14, 21-16 என்ற நேர்செட்டில் கிறிஸ்டோபர்சென்னை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கினார்.

இதனையடுத்து, அடுத்த லீக் ஆட்டத்தில் யோனி லியை (ஜெர்மனி) எதிர்கொண்டார் சிந்து.  இந்த போட்டியில், 21-10, 21-13 என்ற செட் கணக்கில் லியை வீழ்த்தினார். 31 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் வெற்றி பெற்ற சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதேபோல் மற்றொரு வீரர் லக்சயா சென்னும் அரையிறுதியை உறுதி செய்தார். ஸ்ரீகாந்த் மற்றும் மகளிர் இரட்டையர் ஜோடியான அஷ்வினி பொன்னப்பா – சிக்கி ரெட்டி ஜோடி தோல்வியடைந்தது. இதேபோல் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.