உலக கோப்பை கால்பந்து – வேல்ஸ் அணியை வீழ்த்தி ஈரான் வெற்றி

உலக கோப்பை கால்பந்து தொடரில் நேற்று குரூப்-பி பிரிவில் உள்ள ஈரான், வேல்ஸ் அணிகள் மோதின. துவக்கம் முதலே இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் கோல் வாய்ப்புகளை இரு தரப்பிலும் தவறவிட்டனர். ஆட்டநேரமான 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. அதன்பின்னர் கூடுதல் நேரத்தில் இரு தரப்பினரும் வெற்றிக்கான கோலை பதிவு செய்ய ஆக்ரோஷத்துடன் முன்னேறினர்.

இந்த போராட்டத்தில் ஈரான் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியது. ரூபஸ் செஸ்மி, ரமின் ரசீயன் தலா ஒரு கோல் அடித்து, வேல்ஸ் வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இறுதியில் 2-0 என ஈரான் வெற்றிபெற்றது. வெற்றி பெற்றதும் ஈரான் வீரர்கள் மரியாதை நிமித்தமாக மைதானத்தைச் சுற்றி வந்தனர். அப்போது ஈரான் மற்றும் வேல்ஸ் நாடுகளின் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

வேல்ஸ் ரசிகர்களின் கைதட்டி பாராட்டியதைப் பார்த்த சில ஈரானிய வீரர்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.