உலக கோப்பை கால்பந்து – டென்மார்க்கை வீழ்த்தி நாக்அவுட் சுற்றுக்கு ஆஸ்திரேலியா முன்னேறியது

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று குரூப்-டி பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-டென்மார்க் அணிகள் விளையாடின. இப்போட்டியின் முதல் பாதியில் கோல்கள் பதிவாகவில்லை. இதனால் இரண்டாவது பாதி ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது. ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ லெக்கி கோல் அடித்தார்.

அதன்பின்னர் இறுதி வரை கோல்கள் அடிக்கப்படவில்லை. எனவே, ஆஸ்திரேலிய அணி 1-0 என வெற்றி பெற்றதுடன், நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ளது. குரூப் டி பிரிவில் உள்ள பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது குறிப்பிடத்தக்கது.