உலக கோப்பை கால்பந்து – இங்கிலாந்து, அமெரிக்கா இடையிலான போட்டி டிராவில் முடிந்தது

கத்தாரில் நடைபெற்று உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அல் பேட் ஸ்டேடியத்தில் நள்ளிரவு நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் அமெரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 0-0 என்ற கோல் கணக்கில் இருந்தன.

இரண்டாவது பாதி முடிவிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் சமனில் முடிந்ததுடன் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன் மூலம் குரூப் பி பிரிவு புள்ளி பட்டியலில் இங்கிலாந்து 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஈரான் 3 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன.