உலகிலேயே நான் தான் சிறந்த நடிகை – நடிகை கங்கனா ரணாவத் சவால்

தமிழில் தாம்தூம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தற்போது ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஜெயலலிதா வேடத்தில் அவர் நடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சைக் கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் தலைவி படத்தின் புகைப்படங்கள் சிலவற்றையும், இந்தியில் நடித்து வரும் தக்கட் படத்தின் புகைப்படத்தியும் பதிவிட்டுள்ள கங்கனா, “உருமாற்றத்திற்கான எச்சரிக்கை… இந்த உலகில் இப்போதைக்கு என்னைத் தவிர வேறு எந்த நடிகையும் இந்த அளவிற்கு மாற்றத்தை காண்பித்ததில்லை. விதவிதமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் மெரில் ஸ்ட்ரிப் போலவும், ஆக்‌ஷன் மற்றும் கவர்ச்சியில் கேல் கடாட் போலவும் என்னால் நடிக்க முடியும்.

நான் வெளிப்படையாக சவால் விடுக்கிறேன், இந்தப் பிரபஞ்சத்தில் என்னை விட கலைத் திறமை கொண்ட நடிகையை யாரேனும் காட்டினால், அப்போது நான் என்னுடைய ஆணவத்தை கைவிடுகிறேன். அதுவரை அந்தப் பெருமையின் மதிப்பு எனக்கு தான்” என கூறியுள்ளார்.