உலகக் கோப்பை கால்பந்து – ஜப்பானை வீழ்த்தி காலியிறுதிக்கு முன்னேறியது குரோசியா

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 8.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் ஜப்பான், குரோசியா அணிகள் மோதின. தொடக்கத்தில் ஜப்பான் வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் டெய்சன் மேடா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் ஜப்பான் அணி 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியின் 55-வது நிமிடத்தில் குரோசியாவின் இவான் பெரிசிக் ஒரு கோல் அடித்தார். இதனால் 1-1 என சமனிலை வகித்தன. கூடுதலாக 10 நிமிடங்கள் என 3 முறை அளிக்கப்பட்டன. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இறுதியில், குரோசியா அணி 3-1 என்ற கணக்கில் ஜப்பானை போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.