உயிரிழந்த ரசிகரின் வீட்டிக்கு சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஜெயம் ரவி தனது எதார்த்தமான நடிப்பால் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வம் பாகம் ஒன்றில் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜெயம் ரவியின் தீவிர ரசிகரான மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் திடீரென மரணமடைந்தார். இந்த செய்தியை அறிந்த நடிகர் ஜெயம் ரவி, உடனடியாக அவரது சொந்த ஊருக்கு சென்று செந்திலின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செந்திலின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய ஜெயம் ரவி, அவரின் உடன்பிறந்தவர்களுக்கான படிப்புச் செலவு முழுவதையும் தானே ஏற்பதாக உறுதியளித்துள்ளார். ஜெயம் ரவியின் இந்த செயலால் சமூக வலைதளங்களில் இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.