உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பதவி – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ சிந்தனைச் செல்வனும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கோவை பாரதியார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக எம்எல்ஏக்கள் ஈஸ்வரன், கணேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.