Tamilசினிமா

உதயநிதிக்கு ஜோடியான மேகா ஆகாஷ்

மேகா ஆகாஷ், கவுதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டியவர். அந்த படத்தின் தாமதத்தால் இந்த ஆண்டு பொங்கலுக்கு வந்த ரஜினியின் ‘பேட்ட’ படமே இவருக்கு தமிழில் அறிமுக படமானது. அதன் பின்னர், சிம்புவின் ‘வந்தா ராஜா வாதான் வருவேன்’ படத்தில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் மேகா ஆகாஷ், ‘சாட்டிலைட் சங்கர்’ படத்தின் மூலம் இந்தியிலும் தடம் பதிக்கவுள்ளார். தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக மகிழ் திருமேணி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தடம் படத்தின் ரிலீசுக்கு முன்பே உதயநிதியிடம் இந்த படத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

மகிழ்திருமேனியின் வழக்கமான திரில்லர் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க மேகா ஆகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. படத்தின் படப்பிடிப்பு தேதி முடிவானதும், மேகா ஆகாஷ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *