உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் – 3 பேர் பலி

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடர்ந்த போரானது 9 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷியா உக்ரைன் மீது ராக்கெட்டுகளை கொண்டு அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து, உக்ரைனின் கீவ் நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ கூறுகையில், தலைநகரின் உட்கட்டமைப்பு ஒன்றின் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதனால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷிய தாக்குதலில் ஏற்பட்ட சேதம் பற்றிய புகைப்படங்களை வெளிவிவகார துணை மந்திரி எமினே ஜெப்பார் டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.

அதன்படி, குடியிருப்பு கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. பல நகரங்களில் மின்சாரம் இன்றி துண்டிக்கப்பட்டுள்ளன. கீவ் மற்றும் அருகேயுள்ள மோல்டோவா உள்ளிட்ட பல நகரங்களில் ராக்கெட் தாக்குதலுக்கு பின்னர், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்து காணப்படுகிறது.