இளையராஜா காலில் விழுந்து ஆசி பெற்ற நடிகர் விஜய் சேதுபதி

தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ‘மாமனிதன்’. இந்த திரைப்படத்தை ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர்
ராஜா தயாரித்துள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

தர்மதுரை படத்தை தயாரித்த ஆர்.கே.சுரேஷ், மாமனிதன் படத்தின் வெளியிடும் உரிமையை பெற்றதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. மாமனிதன் திரைப்படம் வருகிற மே மாதம் 10ம் தேதி
வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று புதுச்சேரியில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்கு முன் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து விஜய்
சேதுபதியும், சீனு ராமசாமியும் காலில் விழுந்து ஆசிபெற்றுள்ளனர்.

இது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி அவருடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருப்பது. இசைஞானி இளையராஜா அவர்களை சந்தித்து அன்பும் வாழ்த்தும் ஆசியும் பெற்று இன்று மாலை
மாமனிதன் இசை வெளியீட்டுக்கு பாண்டிச்சேரிக்கு விடைபெற்றோம் என்று குறிப்பிட்டு இளையராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.