இளையராஜா இசையமைக்கும் 1417 வது திரைப்படத்தின் போஸ்டர் ரிலீஸ்

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் இசையமைக்கும் 1417-வது திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இயக்குகிறார். பிரஜன் கதாநாயகனாக நடிக்க மனிஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சினாமிகா, மனோபாலா, முத்துராமன், மதுமிதா, மாஸ், ரோகித், ஆருத்ரா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இப்படம் அழகி, ஆட்டோகிராப், 96 படங்களை போன்று பள்ளிப்பருவ காதலை சொல்ல இருக்கிறது. ”நினைவெல்லாம் நீயடா” என்று பெயர் வைத்திருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். இப்படம் வருகிற மே மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.