இலங்கைக்கு எதிரான டி20 தொடர் – தென் ஆப்பிரிக்காவின் கேப்டன்களாக டுபிளிசிஸ், டுமினி நியமன்
இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது. அதன்பின் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென்ஆப்பிரிக்கா 5-0 எனக் கைப்பற்றியது.
இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. 3-வது போட்டி 22-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 24-ந்தேதியும் நடக்கிறது.
முதல் போட்டிக்கு டு பிளிசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடைசி இரண்டு டி20 போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் டுமினி கடைசி போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.