இரண்டு தொண்டு நிறுவனங்களுடன் கைகோர்த்த நடிகை யாமி கவுதம்

தமிழில் வெளியான தமிழ் செல்வனும், தனியார் அஞ்சலும் படத்தில் ஜெய் ஜோடியாக நடித்து பிரபலமானவர் யாமி கவுதம். தமிழ், தெலுங்கில் வெளியான கவுரவம் படத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது யாமி கவுதம் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பாலியல் கொடுமைகளுக்கு எதிராக களம் இறங்க முடிவு செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கு உதவப்போவதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து யாமி கவுதம் கூறும்போது, “சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. பெண்களை பாதுகாப்பதற்கும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவவும் முடிவு செய்துள்ளேன்.

பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளான பெண்களின் மறுவாழ்வுக்காக செயல்படும் இரண்டு தொண்டு நிறுவனங்களுடன் கைகோர்த்து செயல்பட முடிவு செய்து இருக்கிறேன். இது ஆரம்பம்தான். இன்னும் நிறைய உதவிகள் பெண்களுக்கு தேவைப்படுகிறது” என்றார்.