Tamilசினிமா

இரண்டு தேசிய விருதுகள் பெற்ற ‘கே.ஜி.எப்’

விஜய் கிரகண்டுர் தயாரிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட ‘கேஜிஎஃப்’ திரைப்படம் தேசிய அளவில் இரண்டு விருதுகளை வென்றிருக்கிறது.

1970ல் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு, ஒரு தாழ்த்தப்பட்ட சமூக இளைஞன் சமூக சீர்கேடுகளையும், ஏற்ற தாழ்வுகளையும் தகர்த்தெறிந்து முன்னேறும் காலப் பெட்டகத்தின் புரட்சிக்கரமான கதைகளத்தை கொண்ட இப்படம், மும்மொழி திரைப்படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியானது.

இப்படத்திற்கு அதிரடி காட்சி அமைப்புகள் மற்றும் சிறப்பு காட்சி அமைப்புகள் ஆகிய இரு பிரிவுகளில் விருதுகளைப் பெற்றிருக்கிறது.

இம்மகிழ்ச்சியான தருணத்தில், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம், தேசிய திரைப்பட விருதுகள் இயக்குனரகம், ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள், திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் தனது ஆத்மார்த்தமான நன்றியை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *