இயன் சேப்பல் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் அய்யர்

நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இன்று முடிவடைந்த கடைசி போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்தார். முதல் போட்டியில் சதமும், 2-வது போட்டியிலும் அரைசதமும் அடித்திருந்தார்.

ஷ்ரேயாஸ் அய்யர் இதுவரை ஒருநாள் போட்டியில் 16 இன்னிங்சில் பேட்டிங் செய்து 9 அரைசதங்களுக்கு மேல் அடித்துள்ளார். இதன்மூலம் இந்த குறைந்த இன்னிங்சில் அதிக அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இயன் சேப்பல் 8 அரைசதங்கள் அடித்தது சாதனையாக இருந்தது. தற்போது அதை ஷ்ரேயாஸ் அய்யர் முறியடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *