இயக்குநரிடம் விஜய் படம் பற்றிய தகவல் கேட்ட சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்ததாக ‘டான்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.

இதனிடையே டான் படக்குழுவினருக்கு தளபதி 65 பட இயக்குனர் நெல்சன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன், டாக்டர் மற்றும் விஜய் சார் படம் அப்டேட் எதுவும் இல்லையா? என கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த நெல்சன், அடேய் வாழ்த்து சொன்னதுக்கு இப்படியா என பதிவிட, ஏதோ உங்களுக்கு என்னால முடிஞ்சது என சிவகார்த்திகேயன் கமெண்ட் செய்துள்ளார்.

இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ள டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.