இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை!

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரம் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதற்கு அறிகுறியாக நேற்று சில மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளது. இதனால் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *