இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.16 காசுகள் குறைந்தது

நாடு முழுவதும் வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

கடந்த மாதம், 27ம் தேதி முதல் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு, 93.11 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு, 86.45 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில், சென்னையில் கடந்த 24 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை இன்று குறைக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல் விலை  லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து, 92.95 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து 86.29 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை குறைப்பு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.