“இனித் தமிழகம் வெல்லும்” – முதலமைச்சர் ஸ்டாலினின் சமூக வலைதளப் பக்கத்தில் முகப்பு மாற்றம்

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ளது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளார்.  அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும்  ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து, அமைச்சரவையில் இடம்பெற்ற 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

முதல்வராக பதவியேற்றதும் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், தந்தை கருணாநிதியின் படத்திற்கு கண்ணீர்மல்க மரியாதை செலுத்தினார். தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனதும், அவரது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் முகப்பு பக்கங்களில் உள்ள புகைப்படங்களை மாற்றி உள்ளார். இனித் தமிழகம் வெல்லும் என்ற வாசகத்துடன், மு.க.ஸ்டாலின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. பின்னணியில் மு.க.ஸ்டாலின் ஆற்றிய மக்கள் நலப் பணிகள் தொடர்பான புகைப்படத் தொகுப்பு உள்ளது.