இந்திய ரசிகர்கள் மீது இனவெறி தாக்குதல் – விசாரணை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பஸ்டனில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணிக்கு 378 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கம் கொடுத்தது.

4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 259 ரன்கள் குவித்துள்ளது. கைவசம் 4 விக்கெட்டுகள் உள்ளன. இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் 4-வது நாள் ஆட்டத்தின் போது இந்திய ரசிகர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளது. மைதானத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் இனவெறியுடன் திட்டியதாக சில இந்திய ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த இனவெறி குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.