இந்திய கிரிக்கெட் வீரர் சாகல் மனைவியை விவாகரத்து செய்கிறாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாகல். இவரது மனைவி தனஸ்ரீவர்மா. இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. இதற்கிடையே சாகல் தனது மனைவியை விவாகரத்து செய்ய போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

சாகல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புதிய வாழ்க்கையை தொடங்குவது குறித்து பதிவிட்டார். மேலும் தனஸ்ரீ வர்மா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயரில் இருந்த சாகல் பெயரை நீக்கி இருந்தார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய போவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு என்ற தகவலுக்கு சாகல் விளக்கம் அளித்து உள்ளார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்கள் உறவு தொடர்பான எந்தவிதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று உங்கள் அனைவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும். அனைவருக்கும் அன்பு கிடைக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.