இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கு காலில் காயம்!

இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி தற்போது வரை 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய வீரர்கள் சார்பில் முகமது சமி 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இந்த போட்டியில் பந்துவீச்சின் போது இந்திய வீரர் பும்ராவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவ குழு பரிசோதித்து வருகிறது. பும்ராவுக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.